Friday, March 11, 2011

உன் நினைவில்லாத
ஒரு நிமிடம்
என் மரணத்தைக்
கடந்ததாய் இருக்கும்...

நீ என்னை நினைக்கும்
ஒரு நிமிடத்தையும்
நிறுத்திவிட்டால் - என்
மனமெப்படி பொறுக்கும்...
- விஜய. மாதவன்.

Wednesday, March 25, 2009

நான் வரைந்து வைத்த ஓவியம்



இது... நான் கணிணியில் வரைந்த படம். இந்த படத்தைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

" எண்ணத்தில் உள்ளதை
எப்படிச் சொல்வேன்....

இது
மணிப்புறா கொண்டு
மனம் விடும் தூது....

தனிமையில் நின்று
தவித்திடும் மாது...

அன்புடன்.... மாதவன்...

கண்தானம் செய்யுங்கள்


இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 110 கோடியை தாண்டி விட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 62389 பேர் இறந்து போகிறார்கள்.... நாள் ஒன்றுக்கு 86853 பேர்கள் புதிதாக பிறக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவிலுள்ள பார்வையற்றவர்களின் எண்ணிக்கையோ 682497 ஆக இருக்கிறது. இறந்து போகும் மனிதர்கள் தங்கள் கண்களை தானம் செய்தால் பத்தே நாட்களில் இந்தியா பார்வையற்ற மனிதர்கள் இல்லாத நாடாக மலர்ந்து விடும்.

எதிர்கால இந்தியாவை உங்கள் கண்களாவது காணட்டும்.... ஒளிமயமான இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி ஏன் நீங்களாக இருக்கக் கூடாது...

கண்தானம் செய்யுங்கள்.....

" இறந்த பின்பும் இயற்கையை ரசிக்கிறேன்....
இரண்டு கண்களால் இன்னும் இருக்கிறேன் "

Tuesday, March 24, 2009

கார்டு Slogans

உங்கள் வாழ்நாள் பொக்கிஷம்... எங்கள் வரவேற்பறையில்....

Slogans

சித்திரைத் திருவிழாவைப் போன்ற நீண்ட பாரம்பரியம்...

ஆன்மீகமும் ஆனந்தமும் சங்கமமாகும் சித்திரை மாதத்தை
எங்கள் வண்ணங்களால் வரவேற்த்திடுங்கள்....

இயற்கையையும் உங்களையும் இணைத்து வைக்கும் பட்டுக்கூடம்....

தங்கள் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் ஓர் உன்னதத் தேர்வு....

ஒளிரும் அழகில்.... மிளிரும் தரம்....

வந்து பாருங்கள் உங்கள் எண்ணத் தூரிகை சிறகு விரிக்கக் கூடும்...

அழகும், தரமும் அழைக்கும் நுழைவாயில்....










Saturday, March 21, 2009

சிரித்த முகத்தை முகவரியாக்குங்கள்.....

சிந்தனைக்கு சிறகு கட்டிவிடுங்கள்....

நெல் விதைத்து நெல்லை அறுவடை செய்வோம்...

மகிழ்ச்சியைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பெறுவோம்...

மரியாதை தந்து மரியாதை பெறுவோம்...

வாயிலில் வசந்தம் வர, வாவென்று அழைத்திடுங்கள்...

வசந்த வாசம் உங்கள் நாசியை நனைக்கட்டும்....

.....வி. மாதவன்......